1 படம், 2 கிளைமேக்ஸ்!

1 படம், 2 கிளைமேக்ஸ்!

செய்திகள் 10-Nov-2014 11:22 AM IST VRC கருத்துக்கள்

ஹாரர், த்ரில்லர பட வரிசையில் விரைவில் ரிலீசாகவிருக்கும் இன்னொரு படம் ‘ரா’. ‘‘இப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு எக்ஸ்பெரிமென்டல் படமாக இருக்கும்’ என்கிறார் இப்படத்தை இயக்கி, படத்தில் ஒரு கேரக்டரை ஏற்று நடிக்கவும் செய்திருக்கும் பிரபு யுவரார்ஜ். இப்படத்தில் கதையின் நாயகனாக அஷரஃப் நடித்திருக்க, அதிதி செங்கப்பா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். ‘பிளான் எ ஸ்டுடியோஸ்’ சார்பில் அமீன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ராஜ் ஆர்யன் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீடூ விழா நடந்தது. படம் குறித்து பிரபு யுவராஜ் பேசும்போது,

‘‘இப்படத்தில் இணைந்திருக்கும் அத்தனை பேரும் சினிமாவுக்கு புதியவர்கள். இப்போது வருகிற ஹாரர் பட வரிசையில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் இப்படத்தை வேறொரு ஜானர்ல பண்ணியிருக்கிறோம். விஞனான ரீதியாக ஒரு புதிய விஷயத்தை கையாண்டிருக்கிறோம். இது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விஷயமாக இருக்கும். ‘ரா’ என்றால் ‘அபகரிக்கிறது’ என்பது பொருள். தொல்காப்பியத்தில் இருக்கும் வார்த்தை இது. இந்த கதைக்கு அந்த வார்த்தை மிகவும் பொருந்தும் என்பதால் அதை பட தலைப்பாக்கினோம். கண்டிப்பாக இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும்’’ என்றார்.

இயக்குனர் பிரபு யுவராஜும், கதாநாயகனாக நடித்திருக்கும் அஷரஃபும் ‘பைலட்’கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக இரண்டு கிளைமேக்ஸ்களை படம் பிடித்திருக்கிறார்களாம். எதற்கு என்றால், இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் நோக்கத்தோடும் உருவாக்கியிருப்பதால் அதற்கு ஒரு கிளைமேக்ஸ், பொதுவான ரசிகர்களுக்காக வேறு ஒரு கிளைமேக்ஸ் என்று இரண்டு மாறுபட்ட கிளைமேக்ஸ்களை படம் பிடித்திருக்கிறார்களாம். இப்படத்தின் ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெறுகிறது என்றாலும் படத்தில் ஒரு பாடல் மற்றும் ஒரு பிட் பாடல் மட்டும்தான் இடம் பெறுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;