சூப்பர்ஸ்டார் - இளையதளபதி : விஜய்க்கு பிடித்த பட்டம்?

சூப்பர்ஸ்டார் - இளையதளபதி : விஜய்க்கு பிடித்த பட்டம்?

செய்திகள் 8-Nov-2014 5:17 PM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் தமிழ் வாரஇதழ் ஒன்று ‘தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார்’ என்ற கணக்கெடுப்பை நடத்தி, ரசிகர்கள் கொடுத்த வாக்குகளின் அடிப்படையில் சூப்பர்ஸ்டார் பட்டத்தை நடிகர் விஜய் வென்றதாக செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்யை அடுத்த சூப்பர்ஸ்டார் என்று அழைத்து வந்தனர். இது மற்ற நடிகர்களின் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இன்று நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடி வருகிறார். அதில் ஒரு ரசிகர் உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பிடிக்குமா? அல்லது இளையதளபதி பட்டம் பிடிக்குமா என்று கேட்டார்.

அதற்கு நடிகர் விஜய்... ‘‘நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் ரசிகர்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும், என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது நான் நினைத்ததைவிட என்னை அதிகமாகவே நேசிக்கிறீர்கள். உங்களோட இந்த அன்புக்கு முன்னால் எந்த டைட்டிலும் பெருசா தோணலை. என்றும் உங்கள் விஜய்!’’ என்று பதிலளித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;