நவம்பர் 21ல் துள்ளிக்குதிக்கும் ‘மொசக்குட்டி’

நவம்பர் 21ல் துள்ளிக்குதிக்கும் ‘மொசக்குட்டி’

செய்திகள் 8-Nov-2014 11:06 AM IST Chandru கருத்துக்கள்

‘மைனா’, ‘சாட்டை’ போன்ற படங்களைத் தயாரித்த ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ‘மொசக்குட்டி’. இப்படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். பசுபதி, ஜோ மல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்து ரவி, பிரேம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருப்பவர் எம்.ஜீவன். ரமேஷ் விநாயகம் இசையமைக்க, படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார். இம்மாதம் (நவம்பர் ) 21 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘மொசக்குட்டி’ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம் என படத்தின் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;