‘‘நான் பெரியவன் இல்லை’’ - கமல்ஹாசன்

‘‘நான் பெரியவன் இல்லை’’ - கமல்ஹாசன்

செய்திகள் 8-Nov-2014 9:54 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நேற்று தனது 60-ஆவது பிறந்த நாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடினார். கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் சார்பில் சென்னை காமராஜர் சாலையிலுள்ள அண்ணா கலையரங்கில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், மிக்சி, கிரைண்டர், மாற்று திறனாளிகளுக்கு மூன்று ச்க்கர வண்டிகள் முதலிய உதவிகளை வழங்கினார் கமல்ஹாசன். இதனை தொடர்ந்து அவர் தன் ரசிகர்களிடையே பேசும்போது,

‘‘இதுபோன்ற விழாவ கடந்த 30 ஆண்டுகளாக நாம் நடத்தி வருகிறோம். ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறோம். ரத்ததானம் செய்து வருகிறோம். இதை பார்த்து நிறைய பேர் நம்மை சந்தேக பார்வையோடு பார்க்கிறார்கள். அந்த பார்வையின் அர்த்தம் நமக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் நற்பணியை மட்டும் செய்து வருகிறோம். மற்றவர்களை பார்த்து நாம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நம்மை பார்த்து தான் அவர்கள் ரத்ததானம், கண் தானம் போன்றவற்றை செய்ய கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
நான் சம்பாதிப்பதை சினிமாவிலேயே போட்டு, கடைசியில் தானம் செய்ய எதாவது இருக்குமா என்றால் என்னிடம் எதுவும் இருக்காது. நமது உழைப்பில் செய்த உதவி வியர்வையில் நனைந்தவை. இதற்கு நான் கொடுத்தது குறைவு தான்! நீங்கள் தான் நிறைய கொடுத்திருக்கிறீர்கள். நான் எப்போதும் பெரியவன் என்று நினைத்தது கிடையாது. நல்ல கலைஞன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. என்னை மிக நல்ல கலைஞனாக மாற்றியது உங்கள் நற்பணிகள் தான்! இன்றைக்கு நமது பாரத பிரதமர் என் பெயரை சொல்லுகிறார் என்றால அதற்கு நீங்கள் தான் காரணம். என் பெயர் சொல்லப்படும்போது எல்லாம் என்னை தான் சொல்கிறார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அது உங்களையும் சேர்த்து தான் சொல்கிறார். அப்படி நினைத்தால் தான் நமது வேலை தொடரும். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. செய்ய வேண்டிய வேலைகளும் அதிகமாக இருக்கிறது.
நான் கடைசியாக ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். நம்முடைய இந்த இயக்கம் நற்பணி மன்ற இயக்கமாக தான் இயங்க வேண்டும். என்னக்கு பிறகும் இந்த இயக்கம் இயங்க வேண்டும். உங்களுக்கு பின்னாலும் இயங்கவேண்டும். அதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;