கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ எப்போது?

கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ எப்போது?

செய்திகள் 8-Nov-2014 9:49 AM IST Top 10 கருத்துக்கள்

கமல்ஹாசன் நடிப்பில் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ என மூன்று படங்கள் அடுத்து அடுத்தாக ரிலீசாக இருக்கிறது. இதில் ‘உத்தமவில்லன்’ மற்றும் ‘பாபநாசம்’ படங்களின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டு தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘விஸ்வரூபம்’ படத்திற்கு இன்னும் சில காட்சிகளை படம் பிடிக்க வேண்டும். இந்த படங்களில் ‘உத்தம வில்லன்’ தான் முதலில் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் கமல்ஹாசனே கூறியிருக்கிறார். இந்நிலையில் அவரது ட்ரீம் புராஜெக்ட்டான ‘மருதநாயகம்’ படம் குறித்து அவர் பேசும்போது, ‘‘மருதநாயகம்’ படத்தின் வேலைகள் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். இந்தப் படத்தயாரிப்புக்கு பணம் மட்டும் ஒரு பிரச்சனையல்ல. படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க பவர்ஃபுல்லான ஒரு டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க் தேவை. அதற்கான ஆட்கள் வரவேண்டும். காரணம் இந்தப் படத்தை எடுப்பதாக இருந்தால் ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், தமிழ் மொழிகளில் எடுக்க வேண்டும். அந்தந்த மொழிகளில் உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய வேண்டும். அதற்கான வசதிகள் அமைந்தால் ‘மருந்தநாயகம்’ படத்தின் வேலைகளை உடனே துவங்குவேன். ஏற்கெனவே இப்படத்திற்காக 30 நிமிட காட்சிகளை படம் பிடித்துள்ளேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கான காட்சிகளை படம் பிடிக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;