தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் ‘மாரி’

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் ‘மாரி’

செய்திகள் 7-Nov-2014 7:06 PM IST Top 10 கருத்துக்கள்

’வேலையில்லா பட்டதாரி’யின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் படம் ’அனேகன்’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘சூதாடி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் மேலும் ஒரு படமாக ‘காதலில் சொதப்புவது எப்படி’ ‘வாயை மூடி பேசவும்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். ‘மாரி’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. தனுஷின் வுன்டர்பார் நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால்.தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் ரவிசந்தர் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;