கமல்ஹாசனின் ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரம்!

கமல்ஹாசனின் ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரம்!

செய்திகள் 7-Nov-2014 1:57 PM IST VRC கருத்துக்கள்

இன்று (7-11-14) கமல்ஹாசன் பிறந்த நாள்! எப்போதுமே தனது பிறந்த நாளின்போது ஏதாவது ஒரு சமூக சேவைல் தன்னை அர்பணித்துக் கொள்வது அவரது வழக்கம்! அதன் அடிப்படையில் இன்று கமல்ஹாசன் தென் சென்னையிலுள்ள மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் பணிகளில் தன் ரசிகர்களுடன் இணைந்தார். அதன் விவரம் வருமாறு.

தென் சென்னையில் இருக்கும் மாடம்பாக்கம் ஏரி பரந்து விரிந்த பழமையான நீர் பரப்பு. ஒரு காலத்தில் சுற்றியிருந்த விவசாய நிலங்களுக்கும் வன விலங்குகளுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருந்த இந்த ஏரி, நாளடைவில் திறந்த வெளி குப்பை கிடங்காக மாற்றிவிட்டது. மாசு பரப்பும் மக்காத குப்பைகள் டன் கணக்கில் இங்கு சேர்ந்ததால் அப்பகுதியில் இருந்த வனவிலங்குகளும், சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Enveviornmentalist Foundation of India, தன்னார்வலர்கள் குழுவோடு இணைந்து 2012 ஜூலை மாதம் இந்த நீர் பரப்பை சுத்தம் செய்ய முனைந்தது. ஏரி இருக்கும் இடம் பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளூர் மக்கள் மற்றும் மாடம்பாக்கம் பஞ்சாயத்தின் ஆதரவுடன் கொஞ்சம் கொஞ்சமாக குப்பை அகற்றப்பட்டது. 2012-ல் இருந்து இதுவரை 24 முறை இந்த பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுபது சதவிகித கழிவுப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம், அவர்களது தூய்மை இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய சுற்றுசூழல் அறக்கட்டளையோடு இணைந்து மாடம்பாக்கம் ஏரியை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். நீர்பரப்பு மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையின் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக கமல்ஹாசனே நேரடியாக இந்த மகத்தான பணியில் பங்கேற்று சிறப்பித்தது மக்களிடத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மாடம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளிகளிலிருந்து பல தன்னார்வலர்களும், பலதரபட்ட மக்களும் மாடம்பாக்கம் ஏரியை தூய்மைப்படுத்தும் முயற்சியில் கமல்ஹாசனுடன் இணைந்தனர். 25 ஆவது முறையாக நடந்த இந்த பணியால் குறிப்பிட்ட அளவு கழிவு பொருட்கள் ஏரியிலிருந்து அப்புறத்தப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;