‘லிங்கா’ நாயகிக்கு இன்று இனிய நாள்!

‘லிங்கா’ நாயகிக்கு இன்று இனிய நாள்!

செய்திகள் 7-Nov-2014 10:34 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவில் தற்போதைய ‘டாப்’ நடிகைகளில் அனுஷ்காவும் ஒருவர்! ரஜினியுடன் ‘லிங்கா’, அஜித்துடன் ‘என்னை அறிந்தால், மற்றும் தெலுங்கில் பிரம்மாண்ட படங்களாக உருவாகி வரும் ‘ருத்ரம்மா தேவி’, ‘பாஹுபலி’ என மொத்த இந்திய சினிமாவே பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வரும் அனுஷ்காவிற்கு இன்று பிறந்த நாள்! அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை கௌரவப்படுத்தும் விதமாக ‘ருத்ரம்மா தேவி’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு அளித்துள்ளனர் ‘ருத்ரம்மா தேவி’ பட டீம்! தனது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள், நண்பர்கள் என அனைவரது வாழ்த்துக்களுடனும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனுஷ்காவிற்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;