தேனாண்டாள் ஃபிலிம்ஸில் ‘திருடன் போலீஸ்’

தேனாண்டாள் ஃபிலிம்ஸில் ‘திருடன் போலீஸ்’

செய்திகள் 6-Nov-2014 4:07 PM IST VRC கருத்துக்கள்

‘குக்கூ’ படத்தை தொடர்ந்து ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘திருடன் போலீஸ்’. எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய்சேதுபதியின் ஸ்பெஷல் ஆட்டமும் உண்டு! யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் வருகிற 14 ஆம் தேதி ரிலீசாகிறது. தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடும் உரிமையை பல வெற்றிப் படங்களை வெளியிட்ட ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;