12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்!

12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்!

செய்திகள் 6-Nov-2014 1:52 PM IST VRC கருத்துக்கள்

ஜெயலட்சுமி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எஸ்.மோகன்குமார் தயாரித்திருக்கும் படம் ‘நடு இரவு’. அறுபது வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் கதாநாயகர்களாக சுதாகர், அருண், கிரிஷ் ஆகியோர் நடிக்க, கதாநாயகிகளாக மீனாட்சி, ஸ்ரீநிஷா, ஆயிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாப்பதிரத்தில் மோனிகா என்ற சிறுமி நடித்துள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் புதுகை மாரிசா.

ஒரு கிராமத்திற்கு நண்பனின் திருமணத்திற்காக போகும் மூன்று ஜோடிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஒரு பங்களாவில் ஒரு இரவு மட்டும் தங்க முடிவு செய்கிறார்கள். அந்த பங்களாவில் ஏற்கனவே உள்ள பேய் அவர்களை எப்படி கொடுமை படுத்துகிறது என்பதையும், அவர்கள் பேயிடம் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படமாம் இது.

‘‘ஒருநாள் மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை துவக்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்த கஷ்டமாக இருந்தது, இருந்தாலும் படப்பிடிப்பை பனிரெண்டு மணி நேரத்திற்குள் முடித்துவிட்டோம்’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் புதுகை மாரிசா. இப்படத்திற்கு ராம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.ரமேஷ்கிருஷ்ணா இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;