சகோதரர்கள் தயாரிப்பில் விதார்த் நடிக்கும் படம்!

சகோதரர்கள் தயாரிப்பில் விதார்த் நடிக்கும் படம்!

செய்திகள் 6-Nov-2014 12:44 PM IST VRC கருத்துக்கள்

‘ஆள்’ படத்தை தொடர்ந்து விதார்த் நடிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கிற படம் ‘காடு’. இந்தப் படத்தை தொடர்ந்து விதார்த் நடிப்பில் சத்தமில்லாமல் ஒரு படம் வளர்ந்து வருகிறது. அப்படத்தின் பெயர் ‘குற்றமும் தண்டனையும்’. ‘டான் புரொடக்‌ஷன்ஸ்’ எனும் புதிய பட நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் காளீஸ்வரன், முத்து இருவரும் விதார்த்தின் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கியிருக்கும் மணிகண்டன் இயக்கும் இரண்டாவது படம் இது. இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ரஜேஷ் நடிக்க, இன்னொரு நாயகியாக புதுமுகம் பூஜாவும் நடிக்கிறார். இவர் நாடக மேடை கலைஞராம்! இவர்களுடன் நாசரும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். விதார்த்திடம் நாம் பேசியபோது கிடைத்த தகவல்கள் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;