3 வித்தியாசமான கெட்-அப்களில் அமலா பால்!

3 வித்தியாசமான கெட்-அப்களில் அமலா பால்!

செய்திகள் 6-Nov-2014 12:08 PM IST VRC கருத்துக்கள்

நடிகை அமலா பால், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக நடிக்க ஒப்புக்கொண்ட மலையாள படங்கள் ‘லைலா ஓ லைலா’ மற்றும் ‘மிலி’. இதில் ‘மிலி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாகவிருக்கிறது. மலையாளத்தின் முன்னணி இயக்குனரான ஜோஷி இயக்கும் ‘லைலா ஓ லைலா’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கும் அமலா பால், ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார். இப்படத்தில் மூன்று வித்தியாசமான கெட்-அப்களில் நடிக்கிறாராம் அமலா பால்! அத்துடன் அமலா பாலின் தம்பி அபிஜித் பாலும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். திருமணத்திற்கு பிறகு தன் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படம் மாறுபட்ட கதை அமைப்பைக் கொண்டது என்கிறார் அமலா பால்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - கொக்கா மக்கா பாடல் வீடியோ


;