விஷாலுக்கு நன்றி சொன்ன விஜய்!

விஷாலுக்கு நன்றி சொன்ன விஜய்!

செய்திகள் 6-Nov-2014 11:34 AM IST Top 10 கருத்துக்கள்

தீபாவளியன்று வெளியான விஜய்யின் ‘கத்தி’, விஷாலின் ‘பூஜை’ படங்கள் வெற்றிகரகாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒருபுறம் இப்படத்தின் திருட்டு வி.சி.டி.க்களும் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருப்பதை அறிந்த விஷால் சமீபத்தில் திருட்டு வி.சி.டி.க்களை விற்கும் சில கடைகளுக்கு திடீர் என்று விசிட் அடித்து அங்கு பதுக்கி வைத்திருந்த ‘கத்தி’ மற்றும் ‘பூஜை’ படங்களின் திருட்டு விசிடிகக்ளை கை பற்றினார். திருட்டு வி.சி.டி. விஷயத்தில் துணிச்சலாக செயல்பட்ட விஷாலை பாராட்டி நடிகர் விஜய் ட்விட்டரில் பாரட்டியிருந்தார். விஜய்யின் பாராட்டுக்கு நடிகர் விஷாலும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். விஷால் ஏற்கெனவே தான் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ பட திருட்டு வி.சி.டி. விஷயத்திலும் துணிச்சலாக சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சீதக்காதி ட்ரைலர்


;