கமல், விஜய் படத்தில் நடித்த காமெடி நடிகர் மரணம்!

கமல், விஜய் படத்தில் நடித்த காமெடி நடிகர் மரணம்!

செய்திகள் 6-Nov-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

பிரபலமான காமெடி நடிகர்கள் சகாதேவன் - மகாதேவன். இரட்டையர்களான இவர்கள் ‘தேவர் மகன்’, ‘ரோஜா கூட்டம்’, ‘கோயம்பத்தூர் மாப்ளே’ உட்பட ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களில் சகாதேவன் கடந்த ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். மகாதேவன் சக்கரை நோய் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபகாலமாக இந்த நோய் தீவிரமானதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றை நேற்று மாலை அவர் மரணமடைந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் இருக்கிறார்கள். காமெடியால் எல்லோரையும் சிரிக்க வைத்த மகாதேவன் இப்போது அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டு சென்று விட்டார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - டிரைலர்


;