பொன்னாடைகளை தவிர்க்குமாறு சிநேகன் வேண்டுகோள்!

பொன்னாடைகளை தவிர்க்குமாறு சிநேகன் வேண்டுகோள்!

செய்திகள் 5-Nov-2014 5:26 PM IST VRC கருத்துக்கள்

’‘கடந்த சில வருடங்களாக நான் பொன்னாடைகளை பெற்றுக்கொள்வதில்லை. ஏன் என்றால் பொன்னாடைகளுக்கு இருக்க வேண்டிய புனிதம் இப்போது இருப்பதில்லை! அதுவுமின்றி கை துடைக்க கூட உதவாத ஒரு பொருள் அது! அதை எதற்கு பெற்றுக்கொள்ள வேண்டும்? அதனால் பொன்னாடைகளை தவிர்த்து வருகிறேன். என்னைப் போலவே எல்லோரும் பொன்னாடைகளை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு பதிலாக அறிவை வளர்க்கக் கூடிய நல்ல நூல்களை கொடுங்கள், இல்லையென்றால் மனிதனுக்கு தேவையான வேட்டி, பெண்களுக்கு உதவுவதான புடவை போன்ற உடைகளை கொடுங்கள்!’’ என்று வித்தியாசமான ஒரு வேண்டுகோளை வைத்தார் பாடலாசிரியர் சிநேகன்! இது நடந்தது இன்று காலை சென்னை கமலா தியேட்டரில் நடந்த ‘கலை வேந்தன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான். இப்படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கும் சிநேகன், இவ்விழாவில் கலந்துகொள்ள வந்தபோது படக்குழுவினர் அவருக்கு பொன்னாடை போர்த்த முற்பட்டபோது தான் அதை தவிர்த்து சிநேகன் இப்படி பேசினார்.

இவ்விழாவில் சினேகனை தொடர்ந்து பேசிய நடிகை ஆர்த்தி, ‘‘சிநேகன் சார் உங்களது வேண்டுகோளுக்கு இணங்கி இன்று முதல் நானும் இனி பொன்னாடைகளை தவிர்க்க முடிவு செய்து விட்டேன்’’ என்று கூறியதும் அரங்கத்தில் அப்படியொரு பலத்த கைத்தட்டல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;