‘போக்கிரி’ வில்லனை ஹிந்தியில் களமிறக்கிய பிரபுதேவா!

‘போக்கிரி’ வில்லனை ஹிந்தியில் களமிறக்கிய பிரபுதேவா!

செய்திகள் 5-Nov-2014 5:11 PM IST Chandru கருத்துக்கள்

பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த ‘போக்கிரி’ படம் விஜய்யின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இப்படத்தில் ‘அலிபாய் யார்னு எனக்குகூட தெரியாது’ சீரியஸ் டயலாக் பேசிய வில்லன் ஆனந்த்ராஜை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இப்படத்திற்குப் பிறகு ஆனந்த்ராஜ் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. தற்போது தான் இயக்கிவரும் ‘ஆக்ஷன் ஜாக்ஸன்’ ஹிந்திப் படத்திற்காக ஆனந்த்ராஜை பாலிவுட்டிற்கு அழைத்துப் போயிருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா.

தெலுங்கில் மகேஷ்பாபு, சமந்தா நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘தூக்குடு’ படத்தின் ரீமேக்கான இந்த ‘ஆக்ஷன் ஜாக்ஸனி’ல் ஹீரோவாக அஜய் தேவ்கனும், ஹீரோயினாக சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். பாபா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தை வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது ‘ஈராஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;