விவேக்கையும் ‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’கில் மாற்றிய ‘தல’!

விவேக்கையும் ‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’கில் மாற்றிய ‘தல’!

செய்திகள் 5-Nov-2014 4:49 PM IST Chandru கருத்துக்கள்

‘மங்காத்தா’ என்றவுடன் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, மொத்த சினிமா ரசிகர்களுக்கும் படடென்று நினைவுக்கு வருவது ‘தல’யின் சாலட் அன்ட் பெப்பர் லுக் ஸ்டைல்தான். முன்னணி ஹீரோக்களைப் பொறுத்தவரை தங்களின் வயதை மறைப்பதற்காக ‘டை’ அடித்துக் கொண்டு நடிப்பதுதான் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடைபெற்று வரும் பழக்கம். ஆனால், இந்த பழக்கத்தையே மாற்றியமைத்து ‘டை’ அடிக்காத நரைத்த முடியுடனும் ‘ஹீரோ மாஸ்’ காட்ட முடியும் என நிரூபித்த பெருமை நிச்சயமாக அஜித்தையே சாரும். ஹாலிவுட்டின் இந்த ‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’ கலாச்சாரத்தை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த அஜித் ‘மங்காத்தா’ மட்டுமின்றி அதன் பிறகு நடித்த ‘ஆரம்பம்’, ‘வீரம்’ படங்களிலும் அதே ஸ்டைலிலேயே வந்து அசத்தினர். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘என்னை அறிந்தால்...’ படத்திலும் ‘தல’யின் நான்கு கெட்அப்களில் இந்த ‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’கும் ஒன்று.

இப்படத்தில் அஜித்துடன் காமெடி நடிகர் விவேக்கும் நடிக்கிறார். ஏற்கெனவே பல படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள விவேக், கடைசியாக அவருடன் 2007ல் வெளிவந்த ‘கிரீடம்’ படத்தில் நடித்திருந்தார். 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அஜித்துடன் நடிக்கும் விவேக் கடந்த சில வாரங்களாக ‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’கில்தான் பொதுவெளியிலும் வலம் வருகிறாராம். (உத்தமபுத்திரன் படத்தில் ஆடிட்டர் ஏகாம்பரம் கேரக்டரில் வந்த விவேக் ‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’கில் நடித்திருப்பார்) விவேக்கின் இந்த புதிய தோற்றம் ஏன் என ரசிகர்கள் அவரிடம் ட்விட்டரில் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். தற்போது அதற்கான விளக்கத்தை ‘ட்வீட்’ செய்திருக்கிறார் விவேக். அது இங்கே உங்களுக்காக....

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;