கோலிவுட்டுக்கு படையெடுக்கும் கன்னட டீம்!

கோலிவுட்டுக்கு படையெடுக்கும் கன்னட டீம்!

செய்திகள் 5-Nov-2014 4:46 PM IST VRC கருத்துக்கள்

முழுக்க முழுக்க, கடற்கரையோரம் இருக்கும் ஒரு பங்களாவில் நடக்கும் த்ரில்லிங் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் ‘கரையோரம்’. ஒரே இடத்தில் நடக்கும் இந்த கதையில் மொத்தம் எட்டு கேர்கடர்கள் மட்டும்தானாம்! கன்னடத்தில் இரண்டு படங்களை இயக்கிவிட்டு, தமிழ் சினிமாவிலும் தடம் பதிக்கவேண்டும் என்ற ஆசையோடு இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார் ‘ஜேகே’ என்கிற ஜெகதீஷ் குமார். இப்படத்தில் வசிஷ்டா, கணேஷ் பிரசாத் என இருவர் கதாநாயகர்களாக நடிக்க, நிகிஷா பட்டேல், இனியா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசை அமைக்கும் சுஜித் ஷெட்டி, இப்படத்தை தயாரிக்கும் எல்.ஆனந்த், ராமலிங்கம் மற்றும் இயக்குனர் ஜேகே, கதாநாயகர்களாக நடிக்கும் வசிஷ்டா, கணேஷ் பிரசாத் என இப்படத்தில் பணியாற்றும் பெரும்பாலானோரும் கன்னட திரையுலகில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 10- ஆம் தேதி துவங்கி, குறுகிய கால தயாரிப்பாக வெளிவரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரையோரம் - டிரைலர்


;