விஜய்க்கு அட்லி? அஜித்துக்கு கே.வி.ஆனந்த்?

விஜய்க்கு அட்லி? அஜித்துக்கு கே.வி.ஆனந்த்?

செய்திகள் 5-Nov-2014 4:21 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இன்னும் சில நாட்களில் இதற்கான படப்பிடிப்புகள் துவங்கவிருக்கின்றன. அதேபோல் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்...’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித், அடுத்ததாக ‘வீரம்’ சிவாவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தல & தளபதியின் இந்த இரண்டு படங்களையும் அடுத்து அவர்கள் யாருடைய இயக்கத்தில் நடிப்பார்கள் என்பதுதான் இப்போதைய கோலிவுட்டின் ஆரூடம்!

‘விஜய் 58’ படத்தைத் தொடர்ந்து ‘இளையதளபதி’யின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ‘ராஜா ராணி’ புகழ் அட்லி. வரும் 9ஆம் தேதி தன் திருமணத்தை முடித்த சில நாட்களில் விஜய் அடுத்த பட கதைக்கான டிஸ்கஷனில் உட்காரவிருக்கிறார் அட்லி என இப்போதே ஆரூடம் கூறத் துவங்கிவிட்டார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லையென்றாலும், ‘ராஜா ராணி’ என்ற சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்து இத்தனை நாட்களாக அட்லி காத்துக் கொண்டிருக்கிறார் என்றால் நிச்சயம் அது பெரிய புராஜெக்ட்டாகத்தான் இருக்கும் என்ற காரணத்தையும் அவர்களே கூறுகிறார்கள்.

இதுஒருபுறமிருக்க ‘வீரம்’ சிவாவின் படத்தை அடுத்து அஜித்தை இயக்கப்போவது கே.வி.ஆன்ந்த்தான் என்கிறார்கள். கௌதம் மேனன் படத்தில் அஜித் ‘கமிட்’டாவதற்கு முன்பே இந்த பேச்சு அடிபட்டது. ஆனால், அதன்பிறகு நடந்த கதை வேறு... மேனன் படத்தில் தல பிஸியாக, தனுஷை வைத்து ‘அனேகன்’ படத்தில் பிஸியாகிவிட்டார் கே.வி.ஆனந்த். தற்போது, ‘என்னை அறிந்தால்...’, ‘அனேகன்’ ஆகிய இரண்டு படங்களுமே முடிவும் தருவாயில் இருப்பதால் அஜித் & கே.வி.ஆனந்த் கூட்டணியை மறுபடியும் தூசிதட்டி வருகிறார்கள் கோலிவுட்காரர்கள். ‘தல57’ படத்திற்காக கே.வி.ஆனந்த் சூப்பரான ‘த்ரில்லர்’ கதை ஒன்றை உருவாக்கி வைத்திருப்பதாகவும், அந்த கதையின் ‘லைன்’ அஜித்திற்குப் பிடித்துப்போகவே அவரும் ‘டபள் ஓ.கே.’ சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார்கள். இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

ஆனால், ‘தல தளபதி’யின் இந்த இரண்டு கூட்டணிக்கான படங்களும் கண்டிப்பாக 2015 சம்மருக்குப் பிறகே சாத்தியம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;