தனுஷின் அடுத்த இயக்குனர்? ஹீரோயின்?

தனுஷின் அடுத்த இயக்குனர்? ஹீரோயின்?

செய்திகள் 5-Nov-2014 4:00 PM IST Chandru கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அனேகன்’ படம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவான பாடல்கள் வரும் 10ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘சூதாடி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இந்த இரண்டு படங்கள் தவிர்த்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக ஒருசில மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அந்த செய்தியை நடிகர் தனுஷ் தனது ‘ட்வீட்’ மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரின் ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று (நவ 4) காஜல் அகர்வாலும், ராதிகா சரத்குமாரும் சந்திந்துப் பேசியிருப்பதாகக் கூறுகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள்? டெக்னீஷியன்கள் யார்? என்பன போன்ற விவரங்கள் விரைவில் வெளிவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;