தமிழ் சினிமாவில் முதன் முதலாக ‘சிக்ஸ்பேக்’ வைத்தவர் யார்?

தமிழ் சினிமாவில் முதன் முதலாக  ‘சிக்ஸ்பேக்’ வைத்தவர் யார்?

செய்திகள் 5-Nov-2014 3:47 PM IST VRC கருத்துக்கள்

‘‘இன்றைக்கு சினிமாவில் நடிக்கிற பெரும்பாலான ஹீரோ நடிகர்களும் சிக்ஸ்பேக் வைத்து நடிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் வைத்த ஒருவர் இருந்திருக்கிறார். அவர் யார் என்றால், இரட்டை இசை அமைப்பாளர்களாக திகழ்ந்த சங்கர் - கணேஷ் இருவரில் ஒருவரான கணேஷ் தான்! இப்போது சிக்ஸ்பேக் வைக்கும் நடிகர்களுக்கு அவர்தான் முன்னோடி என்று கூட சொல்லலாம். அதைப் போலவே இன்றைய ஃபேஷனில் டிரென்ட் ஆன ஸ்லிம் ஃபிட் டிரெஸ்ஸுக்கும் அவர் தான் முன்னோடி!. அன்றிலிருந்து இன்று வரையிலும் உடம்பை சிக்ஸ்பேக் மாதிரி கட்டுக்கோப்பாக வைத்தும், ஸ்லிம் ஃபிட் டிரெஸ்ஸுடனும் சினிமாவில் வலம் வந்துகொண்டிருப்பவர் அவர் ஒருவர் தான்’’ என்றார் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், இயக்குனருமான கேயார்! அவர் இப்படி பேசியது இன்று காலை சென்னை கமலா திரையரங்கில் நடந்த ‘கலை வேந்தன்’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில்! ஓவினாம் எனும் தற்காப்பு கலை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஜெய் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். காரைக்காலில் பிரசித்தமான ஓவினாம் தற்காபு கலையை கற்றுக்கொண்டு, இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் அஜெய்யை வாழ்த்திப் பேசும்போது தான் கேயார் இப்படி குறிப்பிட்டார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டிரைலர்


;