உச்சம் தொடும் ‘ஐ’ படத்தின் தெலுங்கு ரைட்ஸ்!

உச்சம் தொடும் ‘ஐ’ படத்தின் தெலுங்கு ரைட்ஸ்!

செய்திகள் 5-Nov-2014 1:21 PM IST Chandru கருத்துக்கள்

அடுத்து வரவிருக்கும் படங்களில் இந்திய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கும் படமென்றால் அது நிச்சயமாக ஷங்கரின் ‘ஐ’ படமாகத்தான் இருக்கும். 100 கோடி பட்ஜெட்டில் மேக்அப், கிராபிக்ஸ் என டெக்னிக்கல் விஷயங்களில் உச்சம் தொட்டிருக்கும் இப்படத்தின் தெலுங்கு ரைட்ஸ் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறதாம். தயாரிப்பாளர் என்.வி.பிரசாத்தின் ‘மெகா சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் ‘ஐ’ படத்தின் தெலுங்கு ரைட்ஸை வாங்கியிருக்கிறதாம். ‘எந்திரன்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘ரோபோ’வின் தெலுங்கு ரைட்ஸ் விலையான 27 கோடி ரூபாயையும் தாண்டி ‘ஐ’ படத்திற்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்கப்பட்டிருப்பதால் தெலுங்கு திரையுலகமே ஆச்சரியத்தில் இருக்கிறதாம்.

‘ஐ’ படத்தின் தெலுங்கு ரைட்ஸை 30 கோடி ரூபாய்க்கு வாங்கிய ‘மெகா சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்திடமிருந்து, கிருஷ்ணா மாவட்டத்தின் ரைட்ஸை மட்டுமே 2.52 கோடி ரூபாய்க்கு ‘காவுரி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஏரியாவில் இதுவரை மொத்தம் 6 படங்கள் மட்டுமே 2.5 கோடி ரூபாய் வசூலை நெருங்கியிருப்பதாகவும், அதில் ஷங்கரின் ‘எந்திரன்’ படமும் ஒன்று என்றும் கூறுகிறார்கள். இந்த வருடத்தில் சூப்பர்ஹிட் தெலுங்கு படமான அல்லு அர்ஜுனின் ‘ரேஸ் குர்ரம்’ படம் கூட இந்த வசூல் தொகையை நெருங்கவில்லையாம். இதுதவிர ‘குண்டூர்’ மாவட்டத்தின் ரைட்ஸ் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

‘ஐ’ படம் வரும் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என தெலுங்கு வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;