இரட்டையர்கள் ஹீரோவாக அறிமுகமாகும் ‘குரு சுக்ரன்’

இரட்டையர்கள் ஹீரோவாக அறிமுகமாகும் ‘குரு சுக்ரன்’

செய்திகள் 5-Nov-2014 10:39 AM IST Chandru கருத்துக்கள்

குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குமுதவள்ளி ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘குரு சுக்ரன்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை செல்லத்துரையும், இசையை சந்தோஷ் சந்திரபோஸும் கவனிக்கிறார்கள். இந்தப் படத்தில் குரு, கமல்நாத் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகிகளாக திரிபுரா, சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ரவிராகுல், சிங்கமுத்து, சண்முகராஜன், ஆடுகளம் நரேன், அருள்மணி, சென்ராயன், சுதாசந்திரன், ஸ்ரீ ரஞ்சனி, கருத்தம்மா ராஜஸ்ரீ,அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் குரு, கமல்நாத் என்ற இரட்டையர்கள் அறிமுகமாகிறார்கள். சமீபத்தில் வில்லன் அருள்மணியுடன் குரு மோதும் சண்டைகாட்சி ஒன்று மீனம்பாக்கத்தில் உள்ள பின்னிமில்லில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. 48 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல் இந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாம். சினிமா அனுபவம் இல்லாத ஒரு புதுமுகம் 48 மணி நேரம் ஸ்டன்ட் காட்சியில் பங்குபெற்றது ஆச்சர்யமான விஷயம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்கள் இயக்குனர் ஆனந்தும் ஸ்டன்ட் இயக்குனர் மிரட்டல் செல்வாவும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;