‘கலை வேந்தன்’ பட ‘செட்’டைப் பார்த்து பிரமித்த மக்கள்!

‘கலை வேந்தன்’ பட ‘செட்’டைப் பார்த்து பிரமித்த மக்கள்!

செய்திகள் 5-Nov-2014 10:35 AM IST Chandru கருத்துக்கள்

எஸ்.கே. ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படத்திற்கு ‘கலைவேந்தன்’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.கே.பரசுராம். ஒளிப்பதிவுக்கு எஸ்.கார்த்திக், இசைக்கு ஸ்ரீகாந்த் தேவா, எடிட்டிங்கிற்கு சசிகுமார் என கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். இவர் ‘அம்புலி 3டி’ படத்தில் நடித்தவர். மற்றும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார்,ஆர்த்தி, சம்பத், நளினி, தலைவாசல் விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், விஜய் ஆனந்த், ஜே.முரளிகுமார், மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இரண்டு கால்களுமே இல்லாத ஒரு பத்து வயது சிறுவன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததுடன், ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறாராம்.


படம் பற்றி இயக்குனர் ஆர்.கே.பரசுராம் கூறும்போது, ‘‘இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர், காமெடி, காதல் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டு வருகிறத. இந்தப் படத்தில் ஓவினாம் என்ற தற்காப்பு கலை இடம் பெறுவதால் அதற்காக பெரிய பயிற்சி பள்ளி ஒன்று தேவைப்பட்டது. அதற்கு பல இடங்களில் தேடியும் சரியான இடம் அமையாததால் நாங்களே அதற்காக சுமார் ஏழு லட்சங்கள் செலவு செய்து பிரம்மாண்டமாக மிகப்பெரிய செட் அமைத்து அதில் பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தினோம். அதைப் பார்த்து நிஜ பயிற்சி பள்ளி என்று நினைத்து அருகில் உள்ள மக்கள் கூட்டம் கூடியது. அதனால் நங்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். இந்த பயிற்சி பள்ளி செட்டை பார்த்து ஆரம்பத்தில் நிஜம் என்று நினைத்து அதில் நடித்த நடிகர், நடிகைகளே ஆச்சர்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடதக்கது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 பகுதி 2- தி ரோட் ட்ரிப் வீடியோ


;