‘மாஸ்’ படத்திலிருந்து எமி ஜாக்ஸன் வெளியேறவில்லை!

‘மாஸ்’ படத்திலிருந்து எமி ஜாக்ஸன் வெளியேறவில்லை!

செய்திகள் 5-Nov-2014 10:12 AM IST Chandru கருத்துக்கள்

‘அஞ்சான்’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் ‘மாஸ்’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தில் நயன்தாரா, எமி ஜாக்ஸன் என இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். காமெடிக்கு பிரேம்ஜி அமரன், இசைக்கு யுவன் ஷங்கர் ராஜா என தன் வழக்கமான கூட்டணியோடு ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளை பிஸியாக கவனித்து வருகிறார் வெங்கட் பிரபு.

இதுவரை சூர்யா, நயன்தாரா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், கால்ஷீட் இல்லாததால் இப்படத்திலிருந்து எமி ஜாக்ஸன் விலகிவிட்டதாக நேற்று பல இணையதளங்களிலும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இதுகுறித்து ‘மாஸ்’ படக்குழுவைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, எமி ஜாக்ஸன் ‘மாஸ்’ படத்திலிருந்து வெளியேறவில்லை எனவும், அந்த கேரக்டரில் கண்டிப்பாக அவர்தான் நடிக்கவிருக்கிறார் எனவும் கூறினார்கள்.

லண்டனிலிருந்து சென்னைக்கு வந்திருப்பதாக எமி ஜாக்சன் நேற்று ‘ட்வீட்’ செய்திருந்தார். ‘மாஸ்’ படத்தின் டெஸ்ட் ஷூட்டுக்காகதான் அவர் சென்னை வந்திருப்பதாக முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியையும் ‘மாஸ்’ படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

எமி ஜாக்ஸனுக்கான காட்சிகள் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்படவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

R K நகர் - டீசர்


;