20 லட்சத்தைக் கடந்த ‘லிங்கா’ டீசர்!

20 லட்சத்தைக் கடந்த ‘லிங்கா’ டீசர்!

செய்திகள் 5-Nov-2014 9:59 AM IST Chandru கருத்துக்கள்

நவம்பர் 1ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் வெளியான ‘லிங்கா’ டீஸர் வெளியான 30 மணி நேரத்திலேயே 10 லட்சம் ‘யு டியூப்’ பார்வையாளர்களைச் சென்றடைந்தது. தற்போது 3 நாட்களில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது சூப்பர்ஸ்டார் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் ‘லிங்கா’ டீஸர். இப்போது வரை இந்த டீஸரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 2,197,143-ஐத் தொட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகளவில் உயர வாய்ப்பிருக்கிறது. என்றாலும் ரஜினியின் ‘கோச்சடையான்’ பட டிரைலர் சாதனையான 47 லட்சம் பார்வையாளர்களை இந்த ‘லிங்கா’ டீஸர் தொடுமா என்பது சந்தேகமே.

நேற்றோடு ‘லிங்கா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பியிருக்கிறார். வரும் 9ஆம் தேதி வெளியாகவிருந்த ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளி போடப்பட்டுள்ளதால், எந்த தேதியில் வெளியாகும் என்ற விவரத்தை அனேகமாக இன்று முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;