திருட்டு வி.சி.டி.பிரச்சனை! தமிழ் திரையுலகினர் அவசர கூட்டம்!

திருட்டு வி.சி.டி.பிரச்சனை! தமிழ் திரையுலகினர் அவசர கூட்டம்!

செய்திகள் 5-Nov-2014 9:56 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரும் பிரச்சனையாக இருந்து வருவது திருட்டு வி.சி.டி. தான்! திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க தமிழக காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றாலும் அதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த நிலையில் திருட்டு வி.சி.டி.க்களை ஒழிப்பது குறித்து ஆலோசனை நடத்த தமிழ் திரைப்பட கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க்ம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (தமிழ்நாடு), திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வ்ருமாறு:
‘‘ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் சவாலாக இருந்து வரும் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம் வருகிற 16-11-14 (ஞாயிற்றுக்கிழமை) மத்தியம் 1 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பது குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் விதமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மத்தியம் 1 மணி முதல் படப்பிடிப்புகள் மற்றும் படம் சம்பந்தமான அனைத்து பணிகளும் ரத்து செய்யப்படுகிறது. உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;