விதார்த்தின் பெரிய பட்ஜெட் படம்!

விதார்த்தின் பெரிய பட்ஜெட் படம்!

செய்திகள் 4-Nov-2014 8:54 PM IST VRC கருத்துக்கள்

‘‘நான் நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் எது என்றால், அது ‘காடு’ தான்! மக்கள் மத்தியில் காட்டை பற்றிய, நாட்டை பற்றிய ஒரு விழிப்புணர்வு இப்படம் ஏற்படுத்தும். இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கமாகியிருக்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை’’ என்றார் விதார்த், நேற்று மாலையில் சென்னையில் நடந்த ‘காடு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில். இப்படத்தை ‘சக்ரவர்த்தி ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ எனும் புதிய பட நிறுவனம் சார்பில் கோவையை சேர்ந்த அரசியல் பிரமுகர் ‘நேரு நகர்’ நந்து தயாரித்திருக்கிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பவர் விதார்த் தான். அறிமுக இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு கே இசை அமைத்திருக்கிறார். படத்தின ஆடியோவை தயாரிப்பாளர் ‘நேரு நகர்’ நந்து வெளியிட, ‘காடு’ பட குழுவினர் பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் நந்து,
‘‘சினிமா என்பது பலம் மிக்க ஒரு மீடியா! ஆயிரம் கூட்டங்கள் நடத்தி சொல்லும் ஒரு கருத்தை ஒரு திரைப்படத்தின் மூலம் சொல்லி மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் சக்தி இந்த சினிமாவுக்கு உண்டு. ‘காடு’ படத்தை தயாரிக்க காரணமே இப்படத்தின் கதை மீது எனக்கு ஏற்பட்ட நம்பிக்கையால் தான். இப்படம் பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல் நாட்டுக்கு, மக்களுக்கு, அரசாங்கத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் படமாகவும் அமைந்துள்ளது. காடு, அதை சார்ந்த மக்களின் வாழ்க்கை, அரசாங்கம் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளங்கள்... இப்படி பல கருத்துக்கள் அடங்கிய படம் ‘காடு’. இத்திரைப்படத்தை எங்களது முதல் தயாரிப்பாக தயாரித்து வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.
Iiஇப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக புதுமுகம் சமஸ்கிருதி நடித்திருக்க, சமுத்திரகனி, ‘ஆடுகளம்’ நரேன், முத்துக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். யுகபாரதி பாடல்களை எழுத, மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;