நிறைவுபெற்றது ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு!

நிறைவுபெற்றது ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு!

செய்திகள் 4-Nov-2014 4:44 PM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடம் மார்ச்சில் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதிசெய்யப்பட்டு, ஏப்ரலில் சோனாக்ஷி சின்ஹாவும் அனுஷ்காவும் நாயகியாக ‘லிங்கா’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டு, மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் ‘லிங்கா’ படத்திற்கான பூஜை போடப்பட்டது.

பின்னர் கர்நாடகாவில் உள்ள மெலுகோட், மலுவானா, பண்டவபுரா, சாமுண்டி ஹில்ஸ், மைசூர் பேலஸ் ஆகிய இடங்களிலும், ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலும் ‘லிங்கா’விற்காக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னபூரணா ஸ்டுடியோஸில் ரஜினி, அனுஷ்கா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றிற்கான படப்பிடிப்பையும் நடத்தினார்கள். தொடர்ந்து சென்னை, கர்நாடகாவிலுள்ள ஷிமோகா உள்ளிட்ட பல இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இப்படி தொடர்ந்து பரபரப்பாக படமாக்கப்பட்ட வந்த ‘லிங்கா’வின் கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக துபாய் சென்றிருந்தார்கள் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர். இன்று (நவ 4) ‘லிங்கா’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிக்கப்பட்டு விட்டதாக படத்தின் ஔப்பதிவாளர் ரத்னவேலு தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து சென்னை திரும்பும் ‘லிங்கா’ டீம், படத்தின் இசை வெளியீட்டிற்கான தேதியை முடிவு செய்யவிருக்கிறது. 9ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆடியோ விழாவை 16ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அதேபோல் ஏற்கெனவே திட்டமிட்டபடி டிசம்பர் 12ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறதாம் படக்குழு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;