தமன் பிறந்த நாளில் ‘சாகசம்’ பாடல்கள்!

தமன் பிறந்த நாளில் ‘சாகசம்’ பாடல்கள்!

செய்திகள் 4-Nov-2014 2:33 PM IST VRC கருத்துக்கள்

பிரசாந்த் நடிக்கும் ‘சாகசம்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம்! தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிசியாகியுள்ள படக்குழுவினர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இம்மாதம் 16-ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள இப்படத்தில் பிரசாந்துடன் பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான நர்கிஸ் ஃபக்ரி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். மற்றும் தம்பி ராமையா, நாசர் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். நவம்பர் 16, தமனின் பிறந்த நாள்! அதனால் அவரது இசையில் அமைந்துள்ள ‘சாகசம்’ படப் பாடல்களை நவம்பர் 16, அன்று வெளியிட இருக்கிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தை அவரது தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;