இடம் பொருள் ஏவல்’ ஆல்பம் எப்படியிருக்கும்?

இடம் பொருள் ஏவல்’ ஆல்பம் எப்படியிருக்கும்?

செய்திகள் 4-Nov-2014 12:47 PM IST Chandru கருத்துக்கள்

விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வேக வேகமாக வளர்ந்து வருகிறது ‘இடம் பொருள் ஏவல்’. இப்படத்தில் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், கவிஞர் வைரமுத்துவும் இணைந்து பணிபுரிந்திருக்கிறார்கள். இதனால் இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மாஸ்டர் ஆடியோ சிடியை இயக்குனர் சீனு ராமசாமியிடம் யுவன் கொடுத்துவிட்டாராம். இதனால் ‘இடம் பொருள் ஏவல்’ இசை ஆல்பம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி மனம் திறந்திருக்கிறார்.

‘‘‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தின் மாஸ்டர் ஆடியோ சிடியை யுவன்ஷங்கர் ராஜா நேற்று தந்தார். யுவன் - கவிஞர் வைரமுத்து இருவரும் மனமுன்வந்து இப்படத்திற்கு நினைவுகூறத்தக்க பாடல்களை தந்திருக்கிறார்கள். பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் பாடும் திறனை கொச்சின் ஸ்டூடியோவில் நேரில் பார்த்து வியந்தேன். தெய்வம் செய்த பிழைக்கு இப்பெண்ணிடம் குரலாக வந்து மன்னிப்பு கேட்பது போலவே தோன்றியது. ஒரே ஒருமுறை பாடல் வரிகளை கேட்டுவிட்டு உடனே வைக்கம் விஜயலட்சுமி பாடிய நிகழ்வு அற்புதம். யுவன் உருக்கமாக பாடிய தாய்க்கும் மகனுக்குமான ஒரு பாடல் மற்றும் உங்களுக்கு நெருக்கமான குரல்களும் இந்த ஆல்பத்தில் உண்டு. கதையின் தன்மை, சூழல், படம்பிடிக்கப்பட்ட பாடலுக்கான காட்சிகள் இவைகளை பார்த்து படத்தின் கதையோட்டத்துக்கு தேவையான இசையை தந்த யுவனுக்கும் வரிகளை தந்த கவிஞருக்கும் மேலும் எனது நன்றிகள். விரைவில் பாடல்களை வெளியிடயிருக்கிறோம். நீங்கள் எனக்காக இருக்கும் தெம்பில்தான் என் நாட்கள் நகர்கின்றன.’’

என சீனு ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;