‘ஐ’ தாமதம் ஏன்..? எப்போது ரிலீஸ்? - தயாரிப்பாளர் விளக்கம்

‘ஐ’ தாமதம் ஏன்..? எப்போது ரிலீஸ்? - தயாரிப்பாளர் விளக்கம்

செய்திகள் 4-Nov-2014 12:16 PM IST Chandru கருத்துக்கள்

தீபாவளிக்கே வெளியாகும் என மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போகிறது. இன்னும் கிராபிக்ஸ் வேலைகள் மீதமிருக்கின்றன... பெரிய பட்ஜெட் படம் அதனால் பெரிதாக ரிலீஸ் செய்யத் திட்டமிடுகிறார்கள் என ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லி வந்த நிலையில், ‘ஐ’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனே அதற்கான காரணத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் உட்பட அனைத்து டெக்னீஷியன்களும் பார்த்துப் பார்த்து செதுக்கி வருவதால், தமிழ் சினிமாவை விரும்பும் அத்தனை ரசிகர்களும் ‘ஐ’ படம் சென்றடைய வேண்டும் என்பதற்காக சரியான ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். அதோடு இப்படம் 100 ஆண்டு கால இந்திய சினிமாவை ‘ஐ’ படம் உலகமெங்கும் பேச வைக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். விரைவில் இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை அறிவிப்பாராம் அவர்.

‘ஐ’ படத்தில் வரும் ‘மெர்சலாயிட்டேன்...’ பாடலை தயாரிப்பாளருக்குப் போட்டுக் காண்பித்தாராம் ஷங்கர். அதைப் பார்த்துவிட்டு உண்மையிலேயே அவர் ‘மெர்சலாகி’விட்டாராம். அந்த அளவுக்கு அந்தப் பாடலில் எமி ஜாக்சனை மீன் போலவும், ‘டச்’ போன் போலவும், உருமாறும் மோட்டார் சைக்கிள் போலவும் பல கற்பனை செய்ய முடியாத வடிவங்களில் கிராபிக்ஸில் மாற்றியிருக்கிறார்களாம். இந்தப் பாடலை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்கள் தன்னைப்போலவே மெர்சலாவார்கள் எனவும் ரவிசந்திரன் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;