இன்று.... அனிருத்தின் ‘சிங்கிள் டிராக்’ டீஸர்?

இன்று.... அனிருத்தின் ‘சிங்கிள் டிராக்’ டீஸர்?

செய்திகள் 4-Nov-2014 11:28 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் 100 கோடி வசூல் சாதனை சந்தோஷத்தில் இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். இதனைத் தொடர்ந்து அனிருத் இசையமைப்பில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஆக்கோ’ படத்தின் ‘எனக்கென்ன யாரும் இல்லையே...’ எனும் சிங்கிள் டிராக்கின் டீஸர் இன்று வெளியாகவிருக்கிறது.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, எம்.ஷியாம் குமார் இயக்கும் இப்படத்தைத் தயாரிக்கிறது ‘ரிபெல் ஸ்டுடியோ’ நிறுவனம். இப்படத்தைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் அனிருத்தைத்தான் ஹீரோவாக புரமோட் செய்து வருகிறார்கள். இதுவரை வெளிவந்திருக்கும் எந்த போஸ்டரிலும் அனிருத்தைத் தவிர வேறு யாரும் இடம் பெறவில்லை. இதனால் அனிருத் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;