‘விஐபி’, ‘யான்’ வரிசையில் காத்தம்மா!

‘விஐபி’,  ‘யான்’ வரிசையில் காத்தம்மா!

செய்திகள் 4-Nov-2014 11:25 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’, ‘யான்’ பட வரிசையில் மற்றுமொரு ஒளிப்பதிவாளர் இயக்குனராகியுள்ளார் அவர் பெயர் எம்.டி.சுகுமார். தமிழ், மலையாளம் என கிட்டத்தட்ட 50 படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த இவர் இயக்குகும் படம் ‘காத்தம்மா’. இப்படத்தில் புதுமுகம் பிஜு கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். ‘போகன் வில்லா ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்து இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான சுகுமார் கூறும்போது,

‘‘பெரும்பாலான படங்களில் பாதிக்கப்பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து காரணமானவர்களை கொல்வது, பழிவாங்குவது இப்படிதான் கதைகளாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணான காத்தம்மா எப்படி எதிரிகளை பழிவாங்கினாள் என்பது கதையாக்கப்பட்டுள்ளது. இந்த கதைக்காக புதுமுகமான ஆதிரா பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார் படுத்திக் கொண்டு நடித்துள்ளார். இப்படம் எல்லோராலும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது’’ என்றார்.

கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படத்திற்கு ஜில்லன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;