‘3’ படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷ் - ஐஸ்வர்யா!

‘3’ படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷ் - ஐஸ்வர்யா!

செய்திகள் 4-Nov-2014 11:10 AM IST VRC கருத்துக்கள்

2012ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமா பெண் இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தார் சூப்பர்ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா. தற்போது கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் பரபரப்பாக இருக்கிறது.

கடைசி நேரத்தில், இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் நடிக்க நடிகர் தனுஷு ஒப்புக் கொண்டிருக்கிறாராம். இதுகுறித்த ட்வீட் செய்துள்ள ஐஸ்வர்யா, ‘‘வை ராஜா வை படத்தில் ‘கேமியோ’ ரோலில் நடிக்க ஒப்புக் கொண்ட தனுஷிற்கு நன்றிகள். அவரை இயக்க சந்தோஷமாக தயாராகிக் கொண்டிருக்கிறேன்’’ என ட்வீட் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா இயக்கும் இரண்டாவது படம் என்பதோடு, தற்போது தனுஷும் இணைந்திருப்பதால் ‘வை ராஜா வை’க்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;