மீண்டும் இணையும் ‘ஈ’ ஜோடி!

மீண்டும் இணையும் ‘ஈ’ ஜோடி!

செய்திகள் 4-Nov-2014 10:15 AM IST VRC கருத்துக்கள்

‘யான்’ படத்தை தொடர்ந்து ஜீவா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தை ராம்நாத் இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகவிருக்கிறதாம். முதலில் ‘ஈ’ படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரரன்’ படத்தில் ஜீவா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்படி நயன்தாராவுடன் இரண்டு படங்களில் நடித்த ஜீவா அவருடன் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா


;