நவம்பர் 20ல் ‘தல’ தரிசனம்!

நவம்பர் 20ல் ‘தல’ தரிசனம்!

செய்திகள் 4-Nov-2014 10:09 AM IST Chandru கருத்துக்கள்

‘மோஸ்ட் எக்ஸ்பெக்டட் மூவீஸ் ஆஃப் தி இயர்’ லிஸ்ட்டில் இருக்கும் முக்கிய படம் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘என்னை அறிந்தால்...’. கடந்த சில நாட்களாக இப்படத்தின் போஸ்டர்கள் தினம் ஒன்று வெளியாகி, அஜித் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தங்களது சந்தோஷத்தின் வெளிப்பாடாக ‘என்னை அறிந்தால்...’ படத் தலைப்பை ட்விட்டரில் உலகளவில் ‘டிரென்ட்’ செய்தார்கள். ‘என்னை அறிந்தால்...’ படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி சரியாக நடந்து வருவதால் ஏற்கெனவே கௌதம் அறிவித்தபடி, இந்த மாதத்தில் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிடுவதற்கு பரபரப்பாக ஆயத்தமாகி வருகிறது கௌதமின் டீம்! படத்தின் டீஸரை நவம்பர் 20ஆம் தேதியும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் பாடல்களை டிசம்பர் முதல் வாரத்திலும், படத்தை கிறிஸ்துமஸ் அல்லது பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதியும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

பொதுவாகவே அஜித் தன் படங்கள் சம்பந்தப்பட்ட எந்தவித விழாக்களிலும் கலந்து கொள்ளமாட்டார். அதனால் இந்த ‘என்னை அறிந்தால்...’ படத்தின் ஆடியோ வெளியீடும் ரொம்பவும் சிம்பிளாக ஏதாவது ஒரு எஃப்.எம். ஸ்டேஷனிலோ அல்லது நேரடியாக கடைகளில் விற்பனைக்கோ வருவதற்கான சாத்தியக்கூறுகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;