‘ஸ்டுடியோ 9’ மூடல்? விஜய்சேதுபதி காரணமா?

‘ஸ்டுடியோ 9’ மூடல்? விஜய்சேதுபதி காரணமா?

செய்திகள் 3-Nov-2014 4:22 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் ‘சலீம்’, ‘தங்கமீன்கள்’, ‘சூது கவ்வும்’, ‘பரதேசி’ உட்பட பல படங்களின் தயாரிப்பிலும், விநியோகத்திலும் பங்கு வகித்த பிரபல நிறுவனம் ‘ஸ்டுடியோ 9’. இந்த நிறுவனத்துக்கு தற்போது மிகப் பெரிய அளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அந்த நிறுவனத்தை மூடும் முடிவுக்கு அந்த நிர்வாகத்தினர் வந்துள்ளனர். இந்த நிறுவனத்துக்கு இப்படியான ஒரு நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான காரணமாக கூறப்படுவது இந்நிறுவனம் விஜய்சேதுபதி நடிப்பில் ‘வசந்தகுமாரன்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு பெரிய ஒரு தொகை முன்பணமாக கொடுத்துள்ளனர். ஆனால் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்ட படி அந்தப் படத்தில் நடிக்க ஆரவம் காட்டவில்லை என்பதும், வாங்கிய முன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் பலத்த பண நெருக்கடிக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டிருப்பதால் இந்த நிறுவனத்தை மூடும் முடிவுக்கு வந்துள்ளனராம். இதனை இந்த நிறுவன நிர்வாகத்தினர் தங்களது ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள ‘மகாபலிபுரம்’, ‘ஆ’ ஆகிய படங்களை வெளியிடப் போவதில்லை என்றும் ‘ஸ்டுடியோ 9’ நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;