கதை திருட்டு – இயக்குனர் சங்கத்தின் புதிய அறிவிப்பு!

கதை திருட்டு – இயக்குனர் சங்கத்தின் புதிய அறிவிப்பு!

செய்திகள் 3-Nov-2014 1:53 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கதை திருட்டு எனும் பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘நமது சங்க உறுப்பினர்கள் இனி தங்களது கதைகளை நமது சங்கத்தில் பதிவு செய்து கொள்ளும் விதமாக புதிய ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது கதை திருட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சட்ட ரீதியான் தீர்வுகளுக்கு வழி வகுக்கும்’’ என்று கூறியிருக்கிறார். வழக்கமாக எழுத்தாளர் சங்கத்தில் தான் கதைகளை பதிவு செய்து வருகிறார்கள். இனி இயக்குனர் சங்கத்திலும் தங்களது கதைகளை பதிவு செய்யும் முறை அமலுக்கு வருமானால் அது கதை ஆசிரியர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - ட்ரைலர்


;