‘கத்தி’ வசூலை உலக அளவில் பிரபலப்படுத்திய விஜய் ரசிகர்கள்!

‘கத்தி’ வசூலை உலக அளவில் பிரபலப்படுத்திய விஜய் ரசிகர்கள்!

செய்திகள் 3-Nov-2014 1:26 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த வாரம் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவந்தபோது #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக்கை உலகளவில் ட்விட்டரில் டிரென்ட் செய்தார்கள் அஜித் ரசிகர்கள். தற்போது இது விஜய் ரசிகர்களின் நேரம்.... ‘தல’ ரசிகர்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என ‘இளைய தளபதி’ ரசிகர்களும் களத்தில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

‘கத்தி’ படம் வெளியாகி 12 நாட்களில் உலகமெங்கும் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக இசையமைப்பாளர் அனிருத்தும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் அறிவித்தார்கள். குறைந்த நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்த சாதனையை உலகம் அறியச் செய்ய வேண்டும் என முடிவெடுத்த விஜய் ரசிகர்கள் #Kaththihitsfastest100cr என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பரபரவென ‘ட்வீட்’ செய்து வருகிறார்கள். சென்னை, இந்திய டிரென்டில் முதலிடம் பிடித்து தற்போது உலக டிரென்டிலும் இடம் பிடிருத்திருக்கிறது இந்த #Kaththihitsfastest100cr ஹேஷ்டேக். விரைவில் முதலிடத்தையும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;