‘கத்தி’ 100 கோடி வசூல்? - அனிருத் அறிவிப்பு

‘கத்தி’ 100 கோடி வசூல்? - அனிருத் அறிவிப்பு

செய்திகள் 3-Nov-2014 11:17 AM IST Chandru கருத்துக்கள்

தீபாவளியன்று திரைக்கு வந்த விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம் உலமெங்கும் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ‘ட்வீட்’ செய்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி நேற்றோடு 12 நாட்கள் முடிந்திருக்கிறது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 23.8 கோடி ரூபாய் வசூலித்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதல் 5 நாட்களில் மட்டும் உலகமெங்கும் 71.05 கோடி வசூலித்ததாக ‘கத்தி’யின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் மூலம் அறிவிக்கப்பட்டது. தற்போது 12 நாட்களில் உலகமெங்கும் 100.7 கோடி வசூலித்திருப்பதாக அனிருத் அறிவித்திருக்கிறார்.

அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 65.1 கோடி ரூபாயும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 15.4 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 20.2 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறதாம் ‘கத்தி’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;