மேஜிக் நிபுணராக மாறிய மோகன்லால்!

மேஜிக் நிபுணராக மாறிய மோகன்லால்!

செய்திகள் 3-Nov-2014 11:12 AM IST VRC கருத்துக்கள்

நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், இராணுவத்தில் உயர் கௌரவ பதவி என பல துறைகளிலாக முத்திரை பதித்துள்ள மோகன்லால், இப்போது மேஜிக் கலையிலும் நிபுணராகிவிட்டார்! நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சில மேஜிக் நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காடி பார்வையாளர்களின் பலத்த கரகோஷங்கள் பெற்று பெரும் பாராட்டும் பெற்றிருக்கிறார். மேஜிக் நிபுணர்களுக்கே உரிய தொப்பி, கருப்பு நிற கோட்-சூட்-டுடன் மேடையில் தோன்றிய மோகன்லால் பெண்மணி ஒருவரை அந்தரத்தில் உயர்த்தியவாறு நிகழ்த்தி காட்டிய மேஜிக் பார்வையாளர்களை வியக்க வைத்தது. கேரளாவின் புகழ்பெற்ற மேஜிக் நிபுணரான கோபிநாத் முதுகாடு உருவாக்கியிருக்கிற ‘மேஜிக் பிளானட்’ என்ற மேஜிக் அகாடமியின் துவக்க விழாவில் தான் மோகன்லால் மேஜிக் நிபுணராக காட்சி அளித்தார். மேஜிக் கலையை வளர்க்கும் நோக்கத்துடன் கோபிநாத் முதுகாடு உருவாக்கியிருக்கும் இந்த அகாடமியை கேரள முதல்வர் உம்மன் சாண்டி திறந்து வைத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;