லண்டனுக்குப் பறந்த விஜய் குடும்பம்!

லண்டனுக்குப் பறந்த விஜய் குடும்பம்!

செய்திகள் 3-Nov-2014 10:42 AM IST Chandru கருத்துக்கள்

கதை உரிமை பிரச்சனை, ரிலீஸ் பிரச்சனை என பல தடைகளையும் தாண்டி ‘கத்தி’ படம் வெளியாகி தற்போது அதிரிபுதிரி வெற்றி பெற்றிருப்பதால், எல்லா கவலைகளையும் மறந்து சந்தோஷத்தில் இருக்கிறார் ‘இளைய தளபதி’ விஜய். பெரும் வெற்றி கொடுத்த தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், ஏழை விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொருட்டும் கோயம்புத்தூர் இந்துஸ்தான் கல்லூரியில் ‘கத்தி’ படத்தின் வெற்றிவிழாவை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் ஆகியோருடன் கொண்டாடினார் விஜய். அதன் பிறகு சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட நடிகர் விஜய், தற்போது ஓய்வெடுப்பதற்காக தன் குடும்பத்தினருடன் லண்டன் பறந்துள்ளார்.

லண்டனில் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சில நாள் ஓய்வெடுத்துவிட்டு, சிம்புதேவன் இயக்கத்தில் தான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள சென்னை திரும்புகிறார். நவம்பர் 10ஆம் தேதி சென்னை ஈசிஆரில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரண்மனை செட்டில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோருடன் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் விஜய்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;