‘லிங்கா’ டீஸர் செய்த சாதனை?

‘லிங்கா’ டீஸர் செய்த சாதனை?

செய்திகள் 3-Nov-2014 10:32 AM IST Chandru கருத்துக்கள்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் டீஸர் கடந்த 1ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ‘யு டியூப்’பில் வெளியிடப்பட்டது. காலையிலிருந்தே இந்த டீஸரைக் காண வேண்டும் என ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் இணையதளத்திலேயே ‘தேவுடு’ காத்துக் கொண்டிருந்தனர். அறிவித்தபடி ‘லிங்கா’ டீஸரும் 4 மணிக்கு வெளியாக பரபரவென ‘லிங்கா’ டீஸர் அனைவராலும் பார்க்கப்பட்டு, ‘லைக்’கப்பட்டு, ‘ஷேர்’ செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், வெளியான 30 நிமிடங்களுக்குள்ளாக முதலில் பதிவேற்றம் செய்த ‘லிங்கா’ டீஸர் வீடியோ, டெக்னிக்கல் குறைபாட்டின் காரணமாக வேலை செய்யாமல் போகவே, மற்றொரு புதிய லிங்க் ‘ராக்லைன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

முதலில் வெளியிடப்பட்ட டீஸர் சில நிமிடங்களுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 1 லட்சம் பார்வையாளர்களையும், 3500 லைக்குகளையும் பெற்றிருந்தது. ஆனால், அது நீக்கப்பட்டதால், பார்வையாளர்களின் எண்ணிக்கையும், லைக்குகளின் எண்ணிக்கையும் சட்டென காணாமல் போனது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆனாலும், புதிதாக கொடுக்கப்பட்ட வீடியோவையும் உடனடியாக மறுபடியும் ஷேர் செய்யத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள். இதனால் ‘லிங்கா’ டீஸர் வெளியாகி 40 மணி நேரங்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. அதோடு 11 ஆயிரம் பேர் இந்த டீஸரை ‘லைக்’ செய்துள்ளனர். ‘கோச்சடையான்’ டிரைலர் சாதனையை ஒப்பிடுகையில் ‘லிங்கா’ டீஸரைக் கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவுதான்!

வரும் நவம்பர் 9ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘லிங்கா’ இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;