3 படங்களில் எது முதலில் ரிலீஸ்? - கமல்ஹாசன்

3 படங்களில் எது முதலில் ரிலீஸ்? - கமல்ஹாசன்

செய்திகள் 1-Nov-2014 12:04 PM IST Chandru கருத்துக்கள்

‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ என மூன்று படங்களின் இறுதிக்கட்டத்தில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். இப்போது வரும், அப்போது வரும் என சொல்லப்பட்ட கமலின் 3 படங்களில் எது முதலில் ரிலீஸாகும் என்ற கேள்வியை அவரிடமே டிவி சேனல் ஒன்று கேட்க, அதற்கு சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார் உலகநாயகன். அவரின் பதில் இதோ...

‘‘என் கணிப்பில் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் முதலில் வருவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஆனால், தயாரிப்பாளர்கள் பேசி முடிவெடுத்து இதில் வேறெதும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ படங்களின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து படங்கள் ரெடியாக இருக்கின்றன. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு மட்டுமே இன்னும் வேலை மிச்சமிருக்கிறது. பாக்கி 2 படங்களுமே ரெடியாகத்தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எனது 3 படங்கள் அடுத்தடுத்து வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் ஒரு நிகழ்வாக நான் பார்க்கிறேன்!’’ என்று கமல் பதிலளித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;