சூர்யா, ஜோதிகா படத்தில் சந்தோஷ் நாராயணன்

சூர்யா, ஜோதிகா படத்தில் சந்தோஷ் நாராயணன்

செய்திகள் 1-Nov-2014 11:04 AM IST VRC கருத்துக்கள்

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, தனது ‘2டி’ நிறுவனம் தயாரிக்கும் படத்தின் வேலைகளையும் கவனித்து வருகிறார். மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர்யூ’ படத்தின் ரீ-மேக்காக உருவாகும் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஜோதிகா நடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்த கேரக்டரை தமிழில் ரஹ்மான் ஏற்று நடிக்கிறார். இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஹ்மானே குறிப்பிட்டுள்ளார். மலையாள ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இயக்க, இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை சந்தோஷ் நாராயணனிடம் வழங்கியுள்ளார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;