டி.ஆர்.வரிசையில் இன்னொரு இயக்குனர்!

டி.ஆர்.வரிசையில் இன்னொரு இயக்குனர்!

செய்திகள் 1-Nov-2014 10:52 AM IST VRC கருத்துக்கள்

‘நவகிரகா சினி ஆர்ட்ஸ்’ என்ற படநிறுவனம் தயாரிக்கும் படம் ‘யாரோ ஒருவன்’.
இப்படத்தில் ராம் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஆதிரா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் நாரங், மானவராவ், அலிஷா, நெடுக்காடு ராஜ், மருதுபாண்டி, ஒரியன், சான்ரா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, இயக்கம் என பெரும்பாலான பொறுப்புக்களை ஏற்றிருப்பவர் கே.என்.பைஜு.

படம் பற்றி பைஜு கூறும்போது, ‘‘ நான் தேசிய விருது பெற்ற மளையாள இயக்குனர் பத்மராஜனிடம் உதவியாளராக பணியாற்றியதுடன் பல தொலைகாட்சி தொடர்களை இயக்கியும் உள்ளேன். என் முதல் படத்தில் எல்லா தொழில்நுட்ப வேலைகளையும் நான் செய்ததற்கு காரணமே எல்லா விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டதால்தான்.
காணாமல் போன தனது மனைவியை தேடிச் செல்லும் ராம் மற்றும் துப்பறியும் நிபுணர் மற்றும் அவரது குழுக்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் படத்தின் கதை.

திகிலும், மர்மங்களும் நிறைந்த இப்படத்தின் படப்பிடிப்பி தென்மலை, அச்சன்கோயில், கட்லப்பாறை போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடத்தியுள்ளோம். ரசிகர்களுக்கு இப்படம் வித்தியாசமான திகில் அனுபவத்தை தரும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;