‘அரண்மனை’ பாணியில் இன்னொரு படம்!

‘அரண்மனை’ பாணியில் இன்னொரு படம்!

செய்திகள் 31-Oct-2014 5:42 PM IST VRC கருத்துக்கள்

ஹாரர் பட வரிசையில் ‘யூகன்’ என்ற பெயரில் மற்றுமொரு படம் உருவாகி வருகிறது. பல படங்களில் படத் தொகுப்பு பணிகளை கவனித்துள்ள கமல்.ஜி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அமானுஷ்யத்தின் பின்னணியில் சொல்லப்படும் கதையாம் இது. இந்தப் படத்தில் பணியாற்றும் பெரும்பாலானோரும் புதுமுகங்களே என்பது குறிப்பிடத்தக்கது. பின்னணி இசைக்கு அலெக்ஸ் பிரேம்நாத், ஒளிப்பதிவுக்கு ரவீந்திரன், இசைக்கு ராஷாந்த் அர்வின், படத்தில் நடித்திருப்பவர்கள் என பெரும்பாலானோரும் புதுமுகங்களே! சமீபத்தில் வெளியான ‘அரண்மனை’ படத்தில் சிறப்பு சப்தங்களை உருவாக்கிய ராஜா இப்படத்திலும் பணியாற்றுகிறார். ‘டிவின் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் தாயாராகும் இப்படத்தை இயக்குனர் கமல்.ஜி.யே தயாரிக்கவும் செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;