1 மில்லியனை தொடும் ரஜினி!

1 மில்லியனை தொடும் ரஜினி!

செய்திகள் 31-Oct-2014 1:49 PM IST VRC கருத்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் இணைந்தது கடந்த மே மாதம் தான்! ட்விட்டரில் இணைந்ததை தொடர்ந்து ரஜினி விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலான ட்வீட்களையே செய்துள்ளார் என்றபோதிலும் அவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்றைய நிலவரப்படி ரஜினியை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை (10 லட்சம் பேர்) தொட இன்னும் ஒரு சில ஆயிரங்களே போதுமானது. இந்த எண்ணிக்கை ஓரிரு நாட்களில் எட்டிவிடும். ரஜினி டிவிட்டர் பக்கத்தில் அதிகமாக தென்படாதவர் என்றாலும், அவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது வேறு எந்த ஒரு நடிகருக்கும் கிடைத்திராத ஒரு அரிய விஷயம் தான்! சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட டீஸர்


;