ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா!

ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா!

செய்திகள் 31-Oct-2014 12:27 PM IST VRC கருத்துக்கள்

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, தாயாரித்து, நடித்துள்ள ‘இசை’ திரைப்படத்தை நவம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். எஸ்.ஜே,சூர்யாவே இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இசை சம்பந்தமான கதையை கொடண்ட படம் இது என்று கூறப்படுகிறது. படத்தின் ரிலீசுக்கு முன்னதாக இப்படத்தின் பாடல்களை வருகிற 9-ஆம் தேதி வித்தியாசமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஜெ.சூர்யா. அன்றைய தினம்தான் ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவும் நடைபெறவிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘அன்பே ஆருயிரே’ மற்றும் ‘நியூ’ படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைத்திருந்தார். இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள ‘லிங்கா’ படப் பாடல்கள் வெளியாகும் அதே நாளிலேயே எஸ்.ஜே.சூர்யா இசை அமைத்துள்ள ‘இசை’ படத்தின் பாடல்களும் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே ஒருவித ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் யாருமில்ல வீடியோ பாடல் - தமிழ் படம் 2


;